சாலையை மாற்றுப் பாதையில் அமைக்க கோரி மனு
கடையநல்லூர் அருகே சாலையை மாற்றுப் பாதையில் அமைக்க கோரி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-03-05 09:43 GMT
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த கடையநல்லூர் அருகே வடகரை கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இராஜபாளையம் முதல் செங்கோட்டை வரை திட்டமிடப்பட்டுள்ள NH744 நான்கு வழிச்சாலையை மாற்றுப் பாதையில் அமைக்க வலியுறுத்தி மனு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
அப்பகுதி பொதுமக்கள் விவசாயத்தை உடனே பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் என்றும் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பொதுமக்களும் விவசாயிகளும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.