வடலூரில் பள்ளத்தில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பள்ளத்தில் இறங்கி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-04-08 08:30 GMT
போராட்டம்
குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கட்டடம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. வடலூர் சத்திய ஞான சபையில் சர்வதேச மையம் அமைக்க பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.