மிட்டாரெட்டிஅள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், நல்லம்பள்ளி உள்வட்டம். மிட்டாரெட்டிஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இ.ஆப. அவர்கள் 75 பயனாளிகளுக்கு ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார்.
இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த் துறையின் சார்பில் 40 பயனாளிகளுக்கு ரூ.12.00 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், இணையவழி பட்டா மாறுதல், நத்தம் பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு அரசு உதவித்தொகைகளையும், சமூக பாதுகாப்புத் திட்டம் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.76,000/- மதிப்பில் நலிந்தோர் உதவித் தொகைகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறும்பான்மையினர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.29,500/- மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களையும்.
தோட்டக்கலைத்துறையின் சார்பில் 3 விவசாயிகளுக்கு ரூ.91.513/- மதிப்பீட்டில் தக்காளி குழித்தட்டு நாற்றுகள் மற்றும் சொட்டுநீர் பாசன கருவிகளையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 4 விவசாயிகளுக்கு ரூ.95.112/- மதிப்பீட்டில் நுண்ணுயிர் பாசனம் மற்றும் பண்ணைக் கருவிகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.54 இலட்சம் மதிப்பீட்டில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களையும், மகளிர் திட்டம் சார்பில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் 9 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.108 இலட்சம் மதிப்பீட்டில் வங்கி கடன் உதவிகளையும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் மூலம் உதவித்தொகைகள் என மொத்தம் 75 பயனாளிகளுக்கு ரூ. 1.26 கோடி (ரூ.1,26,96,485/-) மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இஆப.,வழங்கினார்.
முன்னதாக, இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் வருவாய்த்துறை. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மகளிர் திட்டம், சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.