பொதுமக்கள் சாலை மறியல்

காரையில் குடிநீர் சரிவர வினியோகிக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

Update: 2024-01-04 05:31 GMT

காரையில் குடிநீர் சரிவர வினியோகிக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், காரை கிராம ஊராட்சிக்குட்பட்ட ராமலிங்க நகரில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் மலையப்ப நகர் செல்லும் சாலையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கட்டிடம் அருகே மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த காரை கிராம ஊராட்சி மன்ற தலைவர் கலையரசன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் குடிநீர் கிணற்றில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதால் குடிநீர் வினியோகிக்க முடியவில்லை. தூர்வாரும் பணிகள் முடிந்து இன்று முதல் குடிநீர் வழக்கம் போல் வினியோகிக்கப்படும் என்று கூறினார். இதில், சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவ ரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News