5 G டவர் அமைக்க எதிர்ப்பு ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்...
5 G டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-01 07:33 GMT
மனு
5 G டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பொதுமக்கள். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகாவுக்கு உட்பட்ட, பள்ளப்பட்டி நகராட்சி 27 வது வார்டு பகுதியில், தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி டவர் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 5g டவர் அமைத்தால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் எனவும், உடல் நலம் பாதித்தவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படவும், பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கூறி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருப்பதால், அவர்கள் மனுவை அதற்காக அமைக்கப்பட்ட பெட்டியில் செலுத்தினார்கள். இது குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்களில் ஒருவரான ஹாரூன் ரஷீத் செய்தியாளரிடம் தெரிவிக்கும்போது, குடியிருப்பு பகுதிக்குள் டவர் அமைப்பதால் அப்பகுதியில் வசித்து வரும் 300 குடும்பத்தினருக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், சம்பந்தப்பட்ட நபரிடம் டவர் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தோம். இது தொடர்பாக பள்ளப்பட்டி நகராட்சியிலும் புகார் அளித்துள்ளோம். ஆயினும், தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருவதை தடுக்க, இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார்.