புதுச்சேரி: சாராயத்தை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்த இருவர் கைது
புதுச்சேரியில் சாராயத்தை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.;
புதுச்சேரியில் சாராயத்தை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகேபந்தநல்லூர் அருகே நல்லாதாடி கிராமம் பலவாறு பாலம் பகுதியில் சாராயம் விற்பனை நடப்பதாக பந்தநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் ராஜா மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் வருவதை பார்த்தும் பாலத்தில் நின்று கொண்டிருந்த 2 பேர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தனர். உடனே சுதாரித்து கொண்ட போலீசார் அவர்களை விரட்டி பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அந்த 2 பேரும் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் நல்லாதாடி பகுதியை சேர்ந்த செல்வராஜ்(வயது 58), செல்வமணி(29) ஆகிய 2 பேர் என்பதும், அவர்கள் புதுச்சேரி சாராயத்தை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களை கைதுசெய்த போலீசார் அவர்களிடம் இருந்து சுமார் 40 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.