புதுக்கோட்டை: தோரண வாய்க்கால்களை மீட்க கோரிக்கை

Update: 2023-12-21 06:30 GMT

தூர் வாரப்படாத கால்வாய் 

அண்மைக்கால வெள்ள பாதிப்புகளில் இருந்து பாடம் கற்கும் விதமாக புதுக்கோட்டை நகரில் நூற்றாண்டு பழமையான தோரண வாய்க்கால்களை மீட்டெடுப்பது அவசர அவசியம் என்கின்றனர். புதிய நகரம் சமூக ஆர்வலர்கள் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்ட பிறகு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்கள் இதுவரை இல்லாத வரலாறு காணாத மழை பெய்து இருக்கிறது. இது ஏராளமான பொருள் சேதத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சேதங்களை கட்டுப்படுத்தி இருக்க வேண்டிய பழமையான வடிகால் கட்டமைப்புகள் அளிக்கப்பட்டது காரணம் என்பதே சூழலியலாளர்களும் அவ்வப்போது குரல் எழுப்பி வருகின்றன.

இந்த நிலையில் மிக பழமையான திட்டமிடப்பட்ட நகரங்களின் ஒன்றான புதுக்கோட்டையின் வடிகால் கட்டமைப்பு கூர்ந்து கவனிக்க தக்க மாதிரியாக இருப்பதாகவும் ஆனால் இப்போது அவையெல்லாம் அழிந்து போய் இருப்பதையும் எச்சரிக்கை உணர்வுடன் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நகரின் முக்கிய வணிக வீதியான கீழராஜ வீதியில் இருபுறமும் தலா 4அடி அகல தோரண வாய்க்கால்கள் இருந்தன மழை பெய்தால் தண்ணி நிற்காது ஆனால் இப்போது நிலைமை தலைகீழ் எனவே புதுக்கோட்டையை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் கூடி எச்சரிக்கை உணர்வுடன் பெரும் திட்டம் ஒன்று திட்டி அமலாக்க வேண்டும் என்றனர். தற்காலிக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே உள்ள வாய்க்கால்களை தூர்வாரி மலையை எதிர்கொள்ள வேண்டும் என்றாலும் நிரந்தர நடவடிக்கையாக மழை நீரை முழுமையாக நகருக்கு வெளியே கொண்டு சேர்க்கும் திட்டங்களை அரசு மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News