புதுகை மாதா ஆலய 21 ஆம் ஆண்டு திருவிழா - தேர் பவனி

புதுகை புதுமை மாதா ஆலய 21 ஆம் ஆண்டு திருவிழா தேர் பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.;

Update: 2024-05-05 04:53 GMT

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கோவில்பட்டி அருகே அமைந்துள்ள புதுகை புதுமை மாதா ஆலய 21 ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது அதனைத் தொடர்ந்து நேற்று இரவு முக்கிய நிகழ்வான தேர் பவனி நடைபெற்றது எஸ்எப்எஸ் பங்கு ஆலய வளாகத்தில் இருந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்பவணியில் புதுகை புதுமை மாதா உருவத்தை வைத்து திருக்கோகர்ணம் மியூசியம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வான வேடிக்கை மற்றும் மேள தாளங்களுடன் ஊர்வலமாக சென்றபோது வீதிகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புதுகை மாதாவிற்கு மாலைகள் அணிவித்து பிரார்த்தனை செய்தனர்.

Advertisement

அதன் பிறகு தேர்பவனியானது புதுகை புதுமை மாதா ஆலயத்தை சென்றடைந்தது ஆலய வளாகத்தில் சிறப்பு கூட்டு பாடற்திருப்பலி தென்கிழக்கு மாகாணத்தின் வெள்ளி விழா நாயகர்கள் அமிர்த நாதன். ஜெரில் லூயிஸ், மைக்கேல், சகாயராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது கூட்டு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர் கூட்டு திருப்பலியில் மழை வேண்டி பிரார்த்தனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News