குன்னம் அருகே குளத்தில் மூழ்கி புதுமாப்பிள்ளை உயிரிழப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் குளிக்க சென்ற புதுமாப்பிள்ளை உயிர் இழந்த சம்பவம். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-01-18 06:49 GMT
உயிர் இழந்த மணிகண்டன்
உயிர் இழந்த மணிகண்டன்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பரவாய் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் துரை, இவரது மகன் மணிகண்டன் வயது 23. ஓட்டுநரான இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அந்தூர் கிராமத்தை சேர்ந்த கோடீஸ்வரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஜூலை 17ஆம் தேதி மாலை சமத்துவபுரம் அருகே உள்ள பகுதியில் தற்போது ஆழப்படுத்தப்பட்ட அந்த குளத்தில் குளிக்க சென்றுள்ளார். குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது குளத்தின் அழப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அதிக அளவில் களிமண் இருந்ததால் சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குன்னம் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் செல்வராஜ், சம்பவ இடத்திற்கு சென்று குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஜனவரி - 18ம் தேதி இன்று வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.