புளியங்குடியை தாலுகாவாக மாற்ற வேண்டும் - எம்எல்ஏ கோரிக்கை
புளியங்குடியை தலைமையிடமாக கொண்டு வருவாய் வட்டம் அமைக்கப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ சதன் திருமலை குமார் வலியுறுத்தினார்.;
Update: 2024-06-27 02:37 GMT
எம்.எல்.ஏ சதன் திருமலை குமார்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடியை தலைமை இடமாக கொண்டு, அங்கு புதிதாக ஒரு வருவாய் வட்டம் அமைக்க வேண்டும் என வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார் தெரிவித்துள்ளார். இதில் தமிழக சட்டசபையில் பேசிய அவர், அரசு மருத்துவமனையை நவீனமாக தரம் உயர்த்த வேண்டும். எலுமிச்சைப் பழங்களை சேமிக்க குளிர்சாதன மையம் அமைக்க வேண்டும். நகரில் போக்குவரத்து காவல் நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தினார்.