கள்ளக்குறிச்சியில் ரூ.17 லட்சதிற்கு பஞ்சு கொள்முதல்

கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த ஏலத்தில் ரூ.17 லட்சத்திற்கு வியாபாரிகள் பருத்தியை கொள்முதல் செய்தனர்.

Update: 2024-03-14 06:44 GMT

ஏலத்திற்கு வந்த பருத்தி 

கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி வார சந்தை நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பலர் எல்.ஆர்.ஏ., ரக பஞ்சு 755 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். எல்.ஆர்.ஏ., ரகம் குறைந்தபட்சம் 6,900 ரூபாய்க்கும், அதிகபட்சம் 9,009 ரூபாய்க்கும் விலை போனது. அதன்படி 160 விவசாயிகள் கொண்டு வந்த 755 பஞ்சு மூட்டைகள், 17 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News