வெயிலின் தாக்கத்தை குறைக்க வேணுகோபாலருக்கு புஷ்ப யாகம்
உத்திரமேரூர் பஜார் வீதியில் வேணுகோபால சுவாமி கோவிலில் புஷ்ப யாகம் நடந்தது
Update: 2024-03-28 08:21 GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில், சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்யவும், புயல், பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டியும், உத்திரமேரூர் பஜார் வீதியில் வேணுகோபால சுவாமி கோவிலில் நேற்று புஷ்ப யாகம் நடந்தது.
விழாவையொட்டி, வேணுகோபால சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதை தொடர்ந்து மலர் அலங்காரத்தில் வேணுகோபால சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதை தொடர்ந்து மல்லி, முல்லை, ரோஜா, சாமந்தி, தாழம்பூ, கனகாம்பரம், தாமரை, அள்ளி, சம்பங்கி, மனோரஞ்சிதம், போன்ற மலர்களாலும் துளசி, தவனம், வில்வம் போன்ற புனித இலைகள் வாயிலாகவும் புஷ்ப யாகம் நடந்தது."