சாலையை கடக்க முயன்ற மலைப்பாம்பு - வனத்துறையில் விடுவிப்பு !
நெடுஞ்சாலையை கடக்க முயன்ற மலைப்பாம்பை மீட்டு வனத்துறையினர் பத்திரமாக விடுவித்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-04 06:50 GMT
மலைப்பாம்பு
நெடுஞ்சாலையை கடக்க முயன்ற மலைப்பாம்பு - பிடித்துச் சென்று வனத்துறையினர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணை பகுதியில் திண்டிவனம்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு சாலையை கடக்க முயற்சி செய்தது. அவ்வழியாக வந்த கல்லூரி மாணவர் சாலையை கடக்க விடாமல் தடுத்து ஊத்தங்கரை வன துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த வனத்துறையினர் சாலை ஓரத்தில் உள்ள மலைப்பாம்பை பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக உயிருடன் மீட்டனர். பின்னர் மலைபாம்பை ஊத்தங்கரை காப்பு காட்டில் பத்திரமாக விடப்பட்டது. தற்போது வரட்சி நிலவி வருவதால் காட்டில் உள்ள விலங்குகள் அனைத்தும் ஊருக்குள் வந்து கொண்டிருப்பதால், அவற்றை தடுக்க வனத்துறையினர் போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விலங்குகளால் மனிதர்களுக்கும் மனிதர்களால் விலங்குகளுக்கும் ஆபத்து நடக்காது இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.