மலைப்பாம்பு வீடியோ வதந்தி - வனத்துறை எச்சரிக்கை

குற்றாலம் ஐந்தருவியில் மலை பாம்புகள் சன்டை போடும் வீடியோ போலியானது என்றும், தவறான தகவலை பரப்ப வேண்டாம் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2024-06-28 05:04 GMT
வீடியோ காட்சி 
தென்காசி மாவட்டம் குற்றாலம், ஐந்தருவியில் மலை பாம்புகள் மீனைப் பிடித்து சாப்பிடுவதும், மீனுக்காக 2 மலைப்பாம்புகள் சண்டை போடுவது போல வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து வனச்சரகர் பிரகாஷ் கூறுகையில் வனத்துறை, காவல்துறை, தீயணைப்பு துறையினர் ஐந்தருவி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம், இப்படி ஒரு சம்பவம் அந்த பகுதியில் நடக்கவில்லை என தெரிவித்தனர். இதனால் குற்றாலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பீதி அடைய வேண்டாம் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News