நேரம் கேட்டதில் தகராறு - ஓட்டுனருக்கு அரிவாள் வெட்டு
அம்பை பேருந்து நிலையத்தில் நேரம் கேட்டதில் ஏற்பட்ட தகராறில் தனியார் பேருந்து ஓட்டுனரை அரிவாளால் வெட்டிய பயணியை போலீசார் கைது செய்தனர்.
Update: 2024-01-16 07:41 GMT
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் தனியார் பேருந்து ஓட்டுனர் மகேஷ். இவர் நேற்று விக்கிரமசிங்கபுரத்திலிருந்து திருநெல்வேலிக்கு பேருந்தை ஓட்டி சென்றுள்ளார்.அப்பொழுது அம்பை பேருந்து நிலையத்தில் சென்ற பொழுது மணி என்பவர் மகேஷிடம் பேருந்தின் நேரம் குறித்து கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு மகேஷை மணி அரிவாளால் வெட்டியுள்ளார். இது குறித்த புகாரின் அடிப்படையில் மணியை அம்பை போலீசார் கைது செய்தனர்.