ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா

நித்திரவிளையில் ராகுல் காந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம். சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Update: 2024-06-19 11:07 GMT

நித்திரவிளையில் ராகுல் காந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம். சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.


ராகுல் காந்தியின் 54 - வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று ராஜேஷ் குமார் எம் எல் ஏ தலைமையில் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட நித்திவிளையில் வைத்து நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் 54 - கிலோ கேக் வெட்டி அனைவரும் இனிப்பு வழங்கி, 35 - நலிந்த ஏழைகளை பெண்களுக்கு தையல் மிஷின்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் Dr.V.M. பினுலால் சிங், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திருமதி. தாரகை கட்பர்ட் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் வட்டார, நகர தலைவர்கள், மற்றும் மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள், துணை அமைப்புகளின் மாநில,மாவட்ட, வட்டார தலைவர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News