தண்டாவாள பராமரிப்பு இயந்திரம் தடம் புரண்டு விபத்து - இரயில் சேவை பாதிப்பு

மானாமதுரை அருகே தண்டாவாளம் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இயந்திரம் தடம் புரண்டதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது;

Update: 2024-06-21 08:12 GMT
தண்டாவாள பராமரிப்பு இயந்திரம் தடம் புரண்டு விபத்து - இரயில் சேவை பாதிப்பு

 தடம் புரண்ட இயந்திரம் 

  • whatsapp icon

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி, மானாமதுரை, ரயில் நிலையம் வழியாக மதுரை ராமேஸ்வரம் அகல ரயில் பாதை அமைந்துள்ளது. மின்மயமாக்கப்பட்டு, ஒரு வழி பாதையாக அமைக்கப்பட்டுள்ள இந்த வழித்தடத்தில் கடந்த ஒரு மாத காலமாக பேக்கேஜ் செய்யும் ரயில் இன்ஜின் மூலம் இருப்புப் பாதை பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நேற்று வழக்கம் போல் அதிகாலை திருப்பாச்சேத்தி அருகே பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த பேக்கேஜ் செய்யும் இஞ்சின் தடம் புரண்டு மூன்று சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு இறங்கியது. இதனால் மதுரை - மண்டபம், மண்டபம் - மதுரை செல்லும் பயணிகள் ரயில் சேவை பாதிப்படைந்து, மதுரையில் இருந்து கிளம்ப வேண்டிய ரயில் மதுரையிலும், மண்டபத்தில் இருந்து கிளம்பிய ரயில் மானாமரையிலும் நிறுத்தி வைக்கப்பட்டு, இரயில் பயணிகள் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து தண்டவாளத்தை விட்டு இறங்கிய இஞ்சினை மானாமதுரை, மதுரை ரயில் நிலையங்களில் இருந்து ரயில்வே ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது

Tags:    

Similar News