பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல் !
சங்கரன்கோவிலில் பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடப்பட்டது.
By : King 24x7 Angel
Update: 2024-06-15 06:29 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் இருந்து புளியங்குடி செல்லும் பாதையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் இன்று முதல் (15.6.24) ரயில்வே கேட் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இன்று முதல் காலை 6 மணி வரை ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும். எனவே பொதுமக்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் மற்றும் அதிகாரிகள் சார்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.