குடிகாரர்களின் கூடாரமாக மாறிவரும் ரயில்வே ஸ்டேஷன்

கண்டனுார் - புதுவயல் ரயில்வே ஸ்டேஷன் சிதிலமடைந்த நிலையில், குடிகாரர்களின் கூடாரமாக மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2024-05-27 08:59 GMT

கண்டனுார் - புதுவயல் ரயில்வே ஸ்டேஷன் சிதிலமடைந்த நிலையில், குடிகாரர்களின் கூடாரமாக மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கண்டனுார் - புதுவயல் ரயில்வே ஸ்டேஷன் சிதிலமடைந்து குடிகாரர்களின் கூடாரமாக மாறி வருகிறது. காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரை 74 கி.மீ.,துாரம் அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. புதிய ரயில் பாதை அமைத்ததை தொடர்ந்து, கண்டனுார் புதுவயல் ரயில்வே ஸ்டேஷன், புதிய ரயில்வே ஸ்டேஷனாக மாற்றப்பட்டு பயணிகள் இருக்கை, புதிய பிளாட்பார்ம், டிக்கெட் வழங்கும் அறை, அதிகாரி அறை உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.

தற்போது இவ்வழி தடத்தில் திருவாரூர் - காரைக்குடி ரயில், வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் உட்பட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் கண்டனுார் புதுவயல் ரயில்வே ஸ்டேஷன் வளாகம் தற்போது குடிகாரர்களின் கூடாரமாக மாறி வருகிறது. ரயில்வே ஸ்டேஷனை சுற்றிலும் காலி மது பாட்டில்கள் பிளாஸ்டிக் கப், குப்பை நிறைந்து காணப்படுகிறது. மேலும் ரயில்வே ஸ்டேஷன் அறைகளின் கண்ணாடி உடைக்கப்பட்டு கிடக்கிறது. போதிய பராமரிப்பின்றி பயணிகள் அமரும் இடங்கள் உட்பட பல இடத்திலும் பிளாட்பார்ம் முற்றிலும் சேதம் அடைந்து கிடக்கிறது.

பல லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட கண்டனூர் - புதுவயல் ரயில்வே ஸ்டேஷனை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

Similar News