ஆலங்குடி பகுதியில் மழை
By : King 24X7 News (B)
Update: 2023-10-30 10:59 GMT
ஆலங்குடியில் பெய்த மழை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் சுற்றுப்புறங்களில் கடந்த ஒரு மணி நேரமாக மழை பெய்து வருகிறது . இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சுற்றுப்புறங்களான, புதுக்கோட்டை விடுதி ,வடகாடு, கொத்தமங்கலம் ,கீரமங்கலம், உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரமாக நல்ல மழை பெய்து வருகிறது. தற்பொழுது மலர்கள் சாகுபடி செய்யும் வேளையில் இந்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கடந்த மூன்று நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.