கோவையில் நகரில் மிதமான மழை

கோயம்புத்தூரில் குளிர்ந்த சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2024-05-09 15:25 GMT

கோயம்புத்தூரில் மழை

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மக்கள் பெரிதும் அவதிபட்டனர்.வழக்கத்திற்கு மாறாக கோவை மாவட்டத்தில் 100° பாரன்ஹீட் தாண்டி வெப்பம் பதிவாகி வந்த நிலையில் கோவை மாவட்டத்தில் இன்று மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்திருந்தது.இந்த சூழலில் இன்று மாலை அரை மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. கோவை ரேஸ்கோர்ஸ்,பீளமேடு, கணபதி,புலியகுளம், ராமநாதபுரம், சிங்காநல்லூர்,காந்திபுரம் உட்பட நகரின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.நீண்ட இடைவேளைக்கு பிறகு மழை பெய்ததன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News