நல்லம்பள்ளியில் இடி மின்னலுடன் கனமழை

நல்லம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை 5:45 மணி முதல் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

Update: 2024-06-30 14:13 GMT

மழை

தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பொழிந்து வருகின்றது இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நல்லம்பள்ளி, லளிகம், நார்த்தம்பட்டி, கொட்டாவூர், சேசம்பட்டி,ஜருகு, வெள்ளக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை 5:45 மணி முதல் கன மழை கொட்டி தீர்த்தது இடி மின்னலுடன் பெய்த கனமழையால் சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News