கழிவுநீரோடு கலந்த மழைநீர் - ஆத்தூர் பேருந்து நிலையத்தில் தூர்நாற்றம்

ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் மழை நீர் கழிவு நீரோடு கலந்து தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2024-05-12 06:49 GMT

சேலம் மாவட்டம் ஆத்தூரில் செயல்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 300க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன மேலும் இந்த பேருந்து நிலையத்திற்கு பல்லாயிரக்கணக்கான பயணிகள் கிராமப்புறங்களில் இருந்தும் பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர்,இந்த நிலையில் நேற்று இரவு மிதமான மழை பெய்தது.

இந்நிலையில் பேருந்து நிலையம் பகுதியில் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நிற்பதால் தண்ணீர் வெளியே செல்லாமல் அங்குள்ள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் மழை நீரில் கலந்து அதிகளவில் குட்டை போல் ஆங்காங்கே பேருந்து நிலையம் முழுவதும் தேங்கி நிற்கிறது.இந்த மழை நீரில் சாக்கடை நீர் கலப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் நிற்க முடியாமல் முகம் சுளிக்கும் நிலையாகவே உள்ளது.

Tags:    

Similar News