மாப்பிள்ளையூரணியில் மழை நீர் தேக்கம்: பொதுமக்கள் அவதி

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் முழங்கால் அளவிற்கு தேங்கியுள்ள மழை நீர் வடியாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

Update: 2024-01-03 01:06 GMT

தேங்கி நிற்கும் மழை நீர் 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 18 ஆகிய இரு தினங்கள் பெய்த கனமழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் புறநகர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. மேலும் மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டாலும் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து உட்பட்ட கிரேஸ் நகர், ஜே ஜே நகர், வெற்றி நகர், உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரை அகற்ற மாவட்ட நிர்வாகமோ பஞ்சாயத்து நிர்வாகமோ இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மழை நின்று 17 நாள் ஆகியும் இன்னும் மழை குடியிருப்பு பகுதியில் உள்ள மழை நீரை அகற்ற மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த மழை நீரில் கால்நடைகள் செத்து மிதக்கின்றன. மேலும் மழை நீருடன் கழிவு நீரும் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது‌ மேலும் வீடுகளில் இருந்து வெளியே செல்லுவதற்கு தெருக்களில் உள்ள நீரில் நடந்து. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காலில் சேத்துக்கடி புண்ணு உருவாகி உள்ளது. தாங்கள் பகுதியில் இதுவரை மாவட்ட நிர்வாகமோ பஞ்சாயத்து நிர்வாகமோ நேரில் பார்த்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய பொதுமக்கள் தாங்கள் பகுதிக்கு அரசு வழங்கும் நிவாரண உதவி தேவையில்லை. தெருக்களில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

Tags:    

Similar News