உசிலம்பட்டி அருகே கிராமத்தின் நடுவே குளம் போல் தேங்கியுள்ள மழைநீர்

உசிலம்பட்டி அருகே சங்கரலிங்கபுரத்தில் கிராமத்தின் நடுவே குளம் போல் தேங்கியுள்ள மழைநீர்.அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2023-12-28 14:21 GMT

குளம் போல தேங்கியுள்ள மழைநீர்

 மதுரை மாவட்டம் சேடபட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த பாப்பிநாயக்கன்பட்டி பஞ்சாயத்தில் உள்ள சங்கரலிங்கபுரத்தில் பொதுமக்கள் சுமார் 200க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

இக்கிராம மலைப்பகுதியிலிருந்து வரும் மழை நீர் செல்ல வழியின்றி கிராமத்தின் நடுவே தேங்கி நிற்கின்றது.இதனால் ஊரின் நடுவே குளம் போல் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள் அந்த தண்ணீரில் நீந்தி பள்ளிக்குச் செல்லும் அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் வயதானவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பொதுமக்களுக்கு பால் வினியோகம் செய்வோர் இக்கிராமம் வழியாகச் செல்லும் போது தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். தேங்கியுள்ள தண்ணீரில் கழிவு நீரும் கலந்து இருப்பதால் டெங்கு மற்றும் பல்வேறு தொற்று நோய்களுக்கு கிராமமக்கள் ஆளாகின்றனர்.

இதுகுறித்து கிராமமக்கள் அப்பகுதி பஞ்சாயத்து தலைவர் பவுன்ராஜிடம் பலமுறை கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அரசு நிர்வாகம் கவனத்தில் எடுத்து சங்கரலிங்கபுரத்தில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி மழை நீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News