தரங்கம்பாடி அருகே குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்
தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.காழியப்பநல்லூர் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.;
Update: 2024-01-08 07:19 GMT
குடியிருப்பை சூழ்ந்த மழைநீர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒரு சில இடங்களில் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர் குறிப்பாக, காழியப்பநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ரத்தினம் நகர், புதுத்தெரு, என்.என்.சாவடி மெயின் ரோடு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதியுற்று வருகின்றனர். மேலும் தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்து வருவதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே வடிகால்களை சீரமைத்து தண்ணீர் வடிய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.