வெள்ளியணையில் மாணவர்கள் விடுதியை சூழ்ந்த மழை நீர்
வெள்ளியணையில் மாணவர்கள் விடுதியை சூழ்ந்த மழை நீரை வெளியேற்ற சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளியணையில் மாணவர்கள் விடுதியை சூழ்ந்த மழை நீர். நீரை வெளியேற்ற சமூக அலுவலர்கள் கோரிக்கை. கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியில் ஆதிதிராவிட மாணவர்களுக்கான தங்கும் விடுதி உள்ளது. தற்போது கோடை விடுமுறை முடிந்து இன்னும் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால், விடுதியில் மாணவர்கள் யாரும் இல்லாமல் உள்ளனர். இந்த நிலையில் நேற்று கரூர் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. வெள்ளியணை பகுதியிலும் அதிக அளவிலான மழை பெய்தது. இதனால் தாழ்வாக உள்ள பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்தது.
வெள்ளியணை கடைவீதி அருகே முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியும் உள்ளது. இந்த இடம் தாழ்வான பகுதியாக உள்ளதால் அப்பகுதியில் பெய்த மழை நீர் அனைத்தும் ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி அருகே சூழ்ந்தது. இதன் அருகிலேயே 108 ஆம்புலன்ஸ் சேவை மையமும், அதன் அருகிலேயே, வெள்ளியணை, பெரியகுளம் பாசன விவசாயிகள் சங்க அலுவலகம் அப்பகுதியில் உள்ளது. இந்த பகுதி முழுவதுமே வெள்ள நீர் சூழ்ந்து உள்ளது. எனவே சூழ்ந்துள்ள மழை நீரை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.