மழை நிலவரம்
தர்மபுரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி பதிவான மழையின் நிலவரம்...
Update: 2024-05-23 04:18 GMT
தமிழக முழுவதும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தர்மபுரி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பொழிந்து வரும் சூழலில் இன்று காலை 6 மணி நிலவரப்படி தர்மபுரி மாவட்டத்தில் பதிவான மழையின் நிலவரம் பாலக்கோடு 40. 4, மாரண்டஹள்ளி 22 மில்லி மீட்டர், பென்னாகரம் 19 மில்லி மீட்டர், ஒகேனக்கல் 71. 4 மில்லி மீட்டர் , பாப்பிரெட்டிப்பட்டி 5 மில்லி மீட்டர், என மாவட்டத்தில் பதிவான மொத்த மழையின் அளவு 157. 8 மில்லிமீட்டர் மழையும், மாவட்டத்தின் மொத்த சராசரி மழை அளவு 17. 53 மில்லிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.