இராட்சத பலூனை வானில் பறக்கவிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு !
இராட்சத பலூனை வானில் பறக்கவிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-22 09:49 GMT
இராட்சத பலூன்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக மேல் தளத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா நாடாளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, 18 வயது பூர்த்தியான வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திடும் வகையில் இராட்சத பலூனை வானில் பறக்கவிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தேர்தல் நாள் ஏப்ரல் 19, 2024 அனைவரும்வாக்களிப்போம், 100 சதவீதம் வாக்களிப்போம், தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்த 10 அடி சுற்றளவு மற்றும் 10 அடி உயரம் கொண்டஹீலியம் வாயு நிரப்பப்பட்ட இராட்சத பலூனை வானில் 150 அடி உயரத்தில் பறக்க விட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.