கழகத்தினா் சமத்துவப் பொங்கல் கொண்டாட .இராஜேஸ்குமார் எம்.பி அறிவிப்பு
நாமக்கல் கிழக்கு மாவட்டம் முழுவதும் சமத்துவப் பொங்கல் கொண்டாட வேண்டும் - கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி அறிவிப்பு;
நாமக்கல் கிழக்கு மாவட்டம் முழுவதும் சமத்துவப் பொங்கல் கொண்டாட வேண்டும் - கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி அறிவிப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவரின் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சி ‘எல்லோருக்கும் எல்லாமும்’ என்ற சமத்துவக் கொள்கையின் அடிப்படையில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் அனைவரும் ஒருவருக்கொருவர் உடன்பிறப்புகளாய், சமத்துவமாக வாழ்கிறோம் என்பதை பறைசாற்றும் வகையில், கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, நாளை மற்றும் நாளை மறுநாளில் அனைத்து ஒன்றிய, நகரக் கிளைக் கழகங்களின் சார்பிலும் சமத்துவப் பொங்கல் கொண்டாடிட வேண்டும். அனைத்து மதத்தினரும், சாதியினரும் கலந்து கொள்ளும் சமத்துவப் பொங்கலாய் இது அமைந்திடவேண்டும்என நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அறிவித்துள்ளார்.
நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர்களில் பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு, எல்லோரும் சமம் என்பதை வலியுறுத்தும் வகையில் ‘சமத்துவ பொங்கல்’ என கோலமிட வேண்டும். இன்று (13.01.2024) மாலை தொடங்கி ஒலிபெருக்கிகள் மூலம் தமிழ் கொள்கைப் பாடல்களை ஒலிக்கச் செய்திட வேண்டும். குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என தனித்தனியாக பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், கேளிக்கை போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்க வேண்டும்.கழகத்தினர் அனைவரது இல்லங்களிலும் ‘சமத்துவப் பொங்கல்’ என்பதை கோலமாக எழுதி, அதனை படம்பிடித்து சமூக ஊடகங்களில், #SamathuvaPongal என்ற # உடன் வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.