சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பேரணி

போதை விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பேரணி நடைபெற்றது

Update: 2023-12-02 11:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் போதை விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு, விபத்து தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இயங்கி வரும் வீ விட்டமின் குளோபல் மற்றும் கலசலிங்கம் பல்கலைக்கழகம் இணைந்து இந்த விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் முகேஷ் குமார் கொடியசைத்து பேரணியை துவங்கி வைத்தார். விழிப்புணர்வு பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வளம் வந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையம் அருகே செயல்பட்டு வரும் சிக்னல் அருகே நிறைவடைந்தது.

அப்போது அவ்வழியாக ஹெல்மெட் அணிந்து மற்றும் கார் சீட் பெல்ட் அணிந்து வந்த நபர்களுக்கு நகர் காவல் நிலைய ஆய்வாளர்கள் சங்கர் கண்ணன்,செந்தாமரை மற்றும் அரசு தலைமை மருத்துவர் காளிராஜ் உள்ளிட்டோர் மரக்கன்றுகளை பரிசாக வழங்கினர். 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட இப்பேரணியையை வீ விட்டமின் குளோபல் அமைப்பின் நிறுவனர் ஜெஸிலா ஏஞ்சலின் ஒருங்கிணைப்பு செய்தார்.

Tags:    

Similar News