வாக்களிப்பு விழிப்புணர்வு குறித்து பேரணி
தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பது குறித்து துணை ராணுவத்தினரின் அணி வகுப்பு பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்திய தேர்தல் ஆணையமானது 2024-ம் ஆண்டு 18-வது மக்களவை தேர்தலுக்கான அட்டவணையினை வெளியிட்டுள்ளது. ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜீன் 1-ம் தேதி வரையில் தேர்தல் நடைபெறும் நிலையில் ஏப்ரல் 19-ம் தேதி அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவானது நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களித்து தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்ற வலியுறுத்தியும், வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்தும் துணை ராணுவத்தினர் அணி வகுப்பு பேரணி நடத்தினர்.
இந்த அணி வகுப்பு பேரணியானது ராமேஸ்வரம் துறைமுக காவல் நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதி வழியாக பேரணியாக சென்று ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர். இந்த பேரணியில் ஏராளமான துணை ராணுவப்படையினரும், உள்ளூர் போலீசாரும் கலந்து கொண்டனர்.