மணலூர்பேட்டையில் ராமர் கோவில் விழா அழைப்பிதழ் வழங்கல்

மணலூர்பேட்டையில் ராமர் கோவில் விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

Update: 2024-01-13 16:08 GMT

அழைப்பிதழ் வழங்கல்

மணலுார்பேட்டை நகர பா.ஜ., சார்பில் பொது மக்களுக்கு அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் மற்றும் அட்சதை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்குமார், ஓ.பி.சி., அணி மாவட்ட துணைத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

ஒன்றிய பொதுச் செயலாளர் கோவிந்தன், செயலாளர் ஏழுமலை, விவசாய அணி பாவாடை, நகர தலைவர் சதீஷ்குமார், பொதுச் செயலாளர் முருகன், விவசாயி தலைவர் சிவகுரு, நகர செயலாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று, வணிகர்கள், பொதுமக்களுக்கு அழைப்பிதழ் மற்றும் அட்சதைகளை ராமர் படத்துடன் வழங்கினர்.

Tags:    

Similar News