ராமர் கோவில் கும்பாபிஷேகம்: வட மாநிலத்தவர்கள் ஆடிப்பாடி கொண்டாட்டம்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கரூரிர் வசிக்கும் வட மாநிலத்தவர்கள் ஆடிப்பாடி கொண்டாடினர்.

Update: 2024-01-23 07:34 GMT

 அயோத்தியில் நேற்று உலகமே எதிர்பார்த்த ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள இந்துக்கள் இந்த விழாவை ஒரு தீபாவளி திருநாள் போல கொண்டாடி மகிழ்ந்தனர். இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்தில் வசிக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த இந்துக்கள், நேற்று இரவு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்டரங்கில், ராமர் திருவுருவப்படத்திற்கு பூஜைகள் செய்து, ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் ராமருக்கு பிடித்த பஜனை பாடல்களை கோலாட்டம் ஆடியவாரே பாடி ஆடி மகிழ்ந்தனர். மேலும், இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினர். இது குறித்து ராம்தேவ் சேவா சங்கத்தின் தலைவர் பவர் சிங் கூறும்போது, பல நூற்றாண்டாக நிறைவேறாத ராமர் கோவில் கும்பாபிஷேகம் நிறைவேறி உள்ளதால், உற்சாகமாக அதனை கொண்டாடி வருவதாகவும், இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News