ராமர் கோவில் கும்பாபிஷேகம் - கோவில்களில் சிறப்பு வழிபாடு
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தலைவாசல் பெரியேரி ஆஞ்சநேயர் கோவில், சிவசங்கராபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை தலைவாசல் பெரியேரி ஆஞ்சநேயர் கோவிலில் சாமிக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம் ஆகிய பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது. நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். ஆஞ்சநேயர் சாமிக்கு பக்தர்கள் வெற்றிலை மாலை, துளசி மாலை என பல்வேறு மாலைகள் அணிவித்து வழிபாடு செய்தனர். விழாக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் தலைவாசல் அருகே பட்டுதுரை ஊராட்சியில்அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தலைவாசல் பெரியேரி ஆஞ்சநேயர் கோவில், சிவசங்கராபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கிராமத்தில் மாரியம்மன் கோவிலில், அயோத்தியில் ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றதையொட்டி, கிராம பொதுமக்கள் ராமர் படத்தை வைத்து சிறப்பு பூஜை செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.