ராமர் கோவில் கும்பாபிஷேகம்: பத்திரிகைகள் வழங்கும் பணி தீவிரம்
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாமக்கல்ல்லில் வீடுவீடாக பத்திரிகைகள் வழங்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
ராமர் கோவில் கும்பாபிஷேக பத்திரிகை வழங்கும் பணி அயோத்தி ராமஜென்ம பூமியில் வருகிற ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடக்கிறது. ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை சார்பில் இதற்கான அழைப்பிதழ்கள் ராமர் படம், அட்சதை அரிசி ஆகியவற்றுடன் மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனை அந்தந்த பகுதிகளுக்கென பிரித்து வழங்கப்பட்ட நிலையில் அதனை கோவில்களில் வைத்து பூஜை செய்த பின்னர் தங்கள் பகுதிகளில் வீடுகள்தோறும் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள இல்லங்களுக்கு நேரில் சென்று அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமியில் பிரதிஷ்டை செய்யப்படுகின்ற அழைப்பிதழ்களை சிறுபான்மை அணி சார்பில் அதன் மாநில செயலாளர் ஷாஜஹான் அவர்கள் வீடு வீடாக சிறுபான்மை இஸ்லாமியர்களுடன் சென்று அழைப்பிதழை வழங்கினார், மேலும் வீடுகள் தோறும் அன்று தீபமேற்றி ஸ்ரீ ராம், ஜெயராம், ஜெய ஜெய ராம் மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்ய வேண்டும் என்றும், தொலைக்காட்சி மூலம் நிகழ்ச்சியைக் காணவும் தெரிவித்தார்.