இனிப்பு வகைகளை கொண்டு வரையப்பட்ட ராமரின் உருவப்படம்

கோயம்புத்தூர் மாவட்டம், குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நகை தொழிலாளி அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையோட்டி இனிப்பு வகைகளை கொண்டு ராமரின் உருவப்படத்தை வரைந்தார்.

Update: 2024-01-21 05:35 GMT

இனிப்பு வகைகளை கொண்டு வரையப்பட்ட ராமரின் உருவப்படம்

கோவை, குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வடிவங்களில் சிற்பங்கள் செய்வது வழக்கம்.நாளை மறுதினம் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு இனிப்பு வகைகளான பூந்தி,கேசரி மற்றும் அவுல்,எள் உருண்டைகளை கொண்டு ராமரின் உருவத்தை வடிவமைத்து உள்ளார்.கும்பாபிஷேக விழா சிறப்பு ஓவியமாக இதை செய்ததாகவும் இதனை செய்வதற்கு ஒரு நாள் தேவைப்பட்டதாக யு.எம்.டி.ராஜா தெரிவித்தார்.

Tags:    

Similar News