விபத்தில் இறந்தவர் உடலுறுப்புகள் தானம் செய்ததால் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
இருசக்கர வாகனத்தில் சென்றவர் தவறி விழுந்து இறந்ததால் சோகம்.;
விபத்தில் இறந்தவர் உடலுறுப்புகள் தானம் செய்ததால் அரசு மரியாதை
விபத்தில் இறந்தவர் உடலுறுப்புகள் தானம் செய்ததால் அரசு மரியாதை
ராமநாதபுரத்தில் விபத்தில் உயிரிழந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா அபிராமம் அருகே வல்லந்தை கிராமத்தைச் சேரந்த திருப்பதி மகன் முத்துக்குமார் ( 37). இவர் இருக்க்கர வாகனத்தில் சென்றபோது தவறி விழுந்து காயம் அடைந்தார். அவரை மீட்டவர்கள் மதுரை மருத்துவமனையில் சிகிச்சைககாக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் உயிரிழந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது.
அதன்பிறகு இறந்த முத்துக்குமாருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவூர், கமுதி தாசில்தார் சேதுராமன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வில் மண்டல துணை தாசில்தார் மற்றும் காவல்துறையின் கலந்துகொண்டனர். உடல் உறுப்பு தானம் செய்துள்ள முத்துகுமார்க்கு பிரியா (25) என்ற மனைவியும், மணிகண்டன்(5) மித்திரன் (2) மகன்களும் உள்ளனர்.முத்துக்குமார் உடல் வல்லந்தை கிராமத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.