எயிட்ஸ் குறித்து கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு

எயிட்ஸ், புற்றுநோய் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலம்.

Update: 2024-02-29 13:07 GMT

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அரசு மருத்துவ மனை மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரி மாணவ, மாணவிகள் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.

பேருந்து நிலையம் பகுதியிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக சென்ற மாணவ, மாணவிகள் எய்ட்ஸ் மற்றும் காசநோய், புற்றுநோய் போன்ற நோய்கள் ஒழிப்பு மற்றும் அதன் விழிப்புணர்வு குறித்த பதாகைகள் கையில் ஏந்தி முழக்கம் எழுப்பினர்.

இந்த விழிப்புணர்வு பேரணியில், கல்லூரியின் இரத்த தான மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆதிமூலம், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் வாகை பாண்டியன், விக்டோரியா ஆலன், செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் மாமல்லன், தலைமை செவிலியர் தனலெட்சுமி, மருத்துவமனை ஆலோசகர் ஆயிஷாகனி, மருத்துவமனை செவிலியர்கள் மற்றும்மருத்துவமனை அலுவலர்கள் பாண்டி, கார்த்திக், காப்பீட்டு திட்ட பணியாளர் வசீகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News