ராமநாதபுரம் ஆலோசனைக் கூட்டம்
கமுதியில் தமிழக வெற்றி கழகம் ஒன்றிய கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-06 07:04 GMT
தமிழக வெற்றி கழகம்
தமிழக வெற்றி கழகம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், தமிழக வெற்றிக் கழகம் கமுதி ஒன்றியம் சார்பில், தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் மாநிலத் தலைவர் புஸ்ஸிஆனந்த் ஆலோசனைப்படி, மாவட்ட தலைவர் ஜெயபாலா தலைமையில், கமுதி ஒன்றிய தலைவர் மதன் முன்னிலையில், நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தை சார்ந்த நிர்வாகிகள் கிஷோர், குமார், முனீஸ்வரன், விக்னேஷ், அஜித், வேதா, ரமேஷ் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.