ராமநாதபுரம் அழுகிய நிலையில் ஆண் சடலம் - காவல்துறை விசாரணை
சாயல்குடி அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-22 07:01 GMT
ஆண் சடலம்
ராமநாதபுரம் சாயல்குடி அருகேயுள்ள மலட்டாறு பகுதியில் உள்ள கருவேலங்காட்டுக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக சாயல்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் முகமது இர்ஷாத், சார்பு ஆய்வாளர் சல்மோன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் கிடைத்த செல்போனை பரிசோதித்து நடத்திய விசாரனையில் பிரேதமாக மீட்கப்பட்டது முதுகுளத்தூர் தாலுகா பேரையூர் கிராமத்தை சேர்ந்த பொன்னுச்சாமி நாடார் மகன் காமராஜ் (65) என்பது தெரியவந்தது. மேலும் நடத்திய புலன்விசாரனையில், வயது முதிர்வு மற்றும் வறுமை நிலையில் இருந்தவரை குடும்பத்தில் யாரும் கவனிக்காக சூழலில் தனது குலதெய்வம் கோவிலுக்கு நடந்து சென்றதாகவும், கோவிலுக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்திருக்கலாம் எனவும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. வறுமை நிலையில் இருந்த முதியவரை சொந்த குடும்பத்தினரே அநாதையாக அலையவிட்டு அந்த மன உளைச்சலால் முதியவர் மரணித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.