ராமநாதபுரம் : ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்

ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Update: 2024-05-20 05:08 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா அல்குத்புல் அகதாப் சுல்தான் செய்யது இப்ராஹீம் ஷஹீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹா சந்தனக்கூடு திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 850ம் ஆண்டு சந்தனக்கூட்டிற்கான மவுலீது எனும் பூகழ்மாலை கடந்த மே 9 ல் தொடங்கி நாள்தோறும் இரவு 10 மணி வரை நடந்து வருகிறது.மே18ம் தேதி மாலை 5:00 மணியளவில் அடிமரம் ஏற்றப்பட்டது.

நேற்று முன்தினம் 5:00 மணியளவில் ஏர்வாடி முஜாவிர் நல்ல இபுராஹீம் சந்தனக்கூடு தைக்கா வில் இருந்து மேளதாளங்கள் வாண வேடிக்கை முழங்க தர்ஹா வரை ஊர்வலமாக வந்தனர். 20குதிரைகள் ஒட்டகம் முன்னே செல்ல ரத ஊர்வலம் தர்ஹாவை மூன்று முறை சுற்றி வலம் வந்தது. மாலை 6:30 மணியளவில் யானை மீது கொண்டு வரப்பட்ட கொடியினை  தர்ஹா ஹக்தார் நிர்வாகத்தினர் கொடியேற்றம் செய்தனர். மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இவ்விழாவில் அனைத்து சமுதாய மக்களும் திரளாக பங்கேற்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை தர்ஹா ஹக்தார் பொதுமகா சபையினர் செய்திருந்தனர். வருகிற மே31மாலை 4:00 மணிக்கு சந்தனக்கூடு திருவிழா ஆரம்பமாகி ஜுன் 1ம் தேதி அதிகாலை 4:30 மணியளவில் மக்பாராவில் புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும். ஜூன் 7 மாலை 5:00 மணிக்கு கொடியிறக்கம் செய்யப்படும் இன்று இரவு 7:00 மணிக்கு தப்ரூக் எனும் நேய் சோறு வழங்கப்படும்.

Tags:    

Similar News