ராமநாதபுரம் பணங்கள் இறக்குவதற்கு அனுமதி கூறி விவசாயிகள் பேரணி

ராமநாதபுரம் பரமக்குடி நாடாளுமன்ற தேர்தலுக்குள் பனங்கள் இறக்க அனுமதி வழங்க வேண்டி விவசாயிகள் சங்கம் பேரணி.

Update: 2024-02-15 09:02 GMT

விவசாயிகள் பேரணி

ராமநாதபுரம் தமிழ்நாட்டில் பனங்கள் இறக்க அனுமதி வழங்கி அரசாணை வெளியிட கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது. தமிழகத்தில் பனை மரத்திலிருந்து நுங்கு, பனங்கிழங்கு, பனம்பழம், பதநீர், கருப்பட்டி போன்ற உணவு பொருட்களும், அதேபோல் பனை கூடை, கொட்டான், கிளுகிளுப்பை உள்ளிட்ட கைவினைப் பொருட்களும் தயாரிக்கப்படுகிறது. பனை மரங்கள் நம்பி தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, நாகர்கோவில் உள்ள பகுதிகளில் அதிக அளவு பனைமர தொழிலாளர்கள் உள்ளனர். பனைமரத்திலிருந்து பனங்கள் இறக்க தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும். அதேபோல் பதநீர் இறக்குபவர்கள் மீது பொய் வழக்கு பதிய கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவேரி - வைகை - கிருதுமால் - குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் பேரணி மற்றும் மாநாடு நடைபெற்றது. பேரணியை காவிரி - வைகை - கிருதுமால் - குண்டாறு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் முருகன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பனைமர தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பனங்கள் இறக்க தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மற்றும் மாநாடு நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட தலைவர் சோழந்தூர் பாலகிருஷ்ணன் மாவட்ட செயலாளர் மலைச்சாமி உட்பட நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News