ராமநாதபுரம் மீனவர்கள் நடை பயணம்

ராமநாதபுரம் மீனவர்களுக்கு ஆதரவாக உன்னால் எம்பி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் நடைவணத்தில் கலந்துள்ளனர்.

Update: 2024-02-21 04:48 GMT
ராமநாதபுரம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 3ம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று காங்கேசன் கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை இரண்டு விசைப்படகையும் அதில் இருந்த 23 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் மீனவர்கள் 23 வரை ஆஜர்ப்படுத்தப்பட்டதில் 20 பேரை மட்டும் நீதிமன்றம் விடுதலை செய்து இரண்டு படகோட்டிகளுக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும், இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதேபோல் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நம்பு முருகன் என்ற மீனவர் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதால் அவருக்கு இரண்டு ஆண்டு தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முன் தினம் முதல் தங்களுடைய படகுகளில் கருப்பு கொடி கட்டி இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனே மீட்டுக் கொடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மூன்றாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரம் மீன் பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இருந்து 3 நாட்கள் நடை பயணமாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுடைய ஆதார் கார்டு, ஓட்டர் ஐடி, படகுகளின் உரிமம் உள்ளிட்டவற்றை ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபடவும் திட்டமிட்டு நடை பயணத்தை டோக்கன் வழங்கும் அலுவலகத்தில் இருந்து துவக்கி தற்போது ராமேஸ்வரம் வீதிகள் வழியாக பேருந்து நிலையத்தை தற்போது கடந்து செல்கின்றனர் இவர்களுக்கு ஆதரவாக தீவில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்கள் பல்வேறு கட்சி அமைப்பினர்கள் மற்றும் ராமேஸ்வரம் தீவு பொதுமக்கள் என உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து தற்போது நடைபெற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் மூன்று நாள் நடைபெறுமாக சென்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றடைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மீனவர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர் இந்த நடை பயணத்தின் போது முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் எம்பி விமான அன்வர் ராஜா மற்றும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீனவர்களுக்கு ஆதரவாக நடைப்பயணத்தில் கலந்துள்ளனர்.
Tags:    

Similar News