ராமநாதபுரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், விசைப்படகையும் மீட்டுக் கொடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் பேருந்து நிறுத்தத்தில் தொடர் உண்ணாவிர போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
By : King 24x7 Angel
Update: 2024-02-24 10:00 GMT
ராமநாதபுரம் தமிழக கடலோர பகுதி இருந்து மீன்பிடிக்க சென்று கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து இலங்கை கடற்படை மீனவர்களை தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருவதும் அப்படி கைது செய்யப்படும் மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனையும், படகோட்டிகளுக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்து வருகிறது, இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களுடைய படகுகளில் கருப்பு கொடி கட்டி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கடந்த 20 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இடுவதற்காக நடைபயணம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இலங்கை நீதிமன்றம் தொடர்ச்சியாக படகோட்டிற்கு ஆறுமாதம் சிறை தண்டனையும் மீனவர்களுக்கு ஓராண்டு முதல் இரண்டு ஆண்டு முறை சிறை தண்டனை விதிப்பதை கண்டித்தும் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், விசைப்படகையும் மீட்டுக் கொடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தத்தில் தொடர் உண்ணாவிர போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.