ராமநாதபுரம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி !
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-01 08:46 GMT
மாணவர் சேர்க்கை பேரணி
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அரசு துவக்க பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் தலைமை ஆசிரியர் ராஜூ அனைவரையும் வரவேற்று பேசினார்.பேரணியை வட்டாரக் கல்வி அலுவலர் தமிழரசி தொடங்கி வைத்தார்.இவ்விழாவில் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் உலகநாதன் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ராணி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாத்திமா கனி இருபால் ஆசிரியர்கள் சந்திரா, அன்பின் அமலன்,கவிதா, ஜான்சி ராணி மற்றும் பெற்றோர்கள்,இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள்,பொது மக்கள் கலந்து கொண்டனர் புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. முதல் வகுப்பில் ஆண் 05, பெண் 06 மொத்தம் 11பேர் புதிய மாணவர்கள் சேர்ந்துள்ளனர். திருப்பாலைக்குடி முக்கிய பகுதிகளில் பேரணி சென்று அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.