ராமநாதபுரம் அரசு பள்ளி ஆண்டு விழாவுக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்

சாயல்குடி அருகே அரசு பள்ளியில் நடந்த ஆண்டு விழாவுக்கு பள்ளிக்குத் தேவையான பொருட்களை சீர்வரிசையாக கொண்டு வந்து கொடுத்த கிராம மக்கள்.

Update: 2024-04-26 13:12 GMT

சீர் வரிசை வழங்கிய மக்கள்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்கு மூக்கையூரில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி ஆண்டு விழா கலைத்திருவிழா கல்விச்சீர் வழங்கும் விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

பள்ளி மேலாண்மை குழு தலைவர் பூமயில் மாயக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கடலாடி வட்டார கல்வி அலுவலர் ருக்மணி தேவி முன்னிலை வகித்தார். கடலாடி வட்டார ஆசிரியர் பயிற்றுனர் வேளாங்கண்ணி, மாணவ மாணவிகளுக்கு கல்வி தொடர்பான கருத்துரை பற்றி பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைச் செயலாளர் கரிசல் கலைமுருகன் விழா பேருரை ஆற்றினார்.

பள்ளியின் ஆண்டு அறிக்கையை தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ் வாசித்தார். கலை நிகழ்ச்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சாயல்குடி காவல் ஆய்வாளர் முகமது எர்ஷாத் பரிசுகள் வழங்கி பாராட்டினார். முன்னதாக வடக்கு மூக்கையூர் கிராம பொதுமக்கள் பள்ளிக்குத் தேவையான உபகரணங்களை சீர்வரிசையாக ஊர்வலமாக வந்து பள்ளியில் கொடுத்தனர். சிறப்பாக நடைபெற்ற இந்த விழாவில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கடலாடி வட்டாரத் தலைவர் முனியசாமி மற்றும் அனைத்து பள்ளி ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், முன்னாள் மாணவ மாணவியர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை வடக்கு முக்கையூர் நேதாஜி ராயல் பாய்ஸ் அமைப்பினர் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் இடைநிலை ஆசிரியர் பகலவன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags:    

Similar News