ராமநாதபுரம் சுற்றுலா பயணிகள் அவதி

ராமநாதபுரம் அரியமான் கடற்கரை டோல்கேட்டில் - வசூல் வேட்டை சுற்றுலா பயணிகள் அவதி.

Update: 2024-02-22 09:14 GMT
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் சாத்தக்கோன்வலசை ஊராட்சிக்குட்பட்ட அரியமான் கடற்கரை பகுதிக்கு தினமும் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடம் இருசக்கர வாகனத்திற்கு ரூபாய் 20,30,மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூபாய் 30 என்ற முறையில் வசூல் செய்யப்படுகிறது.வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக அளவில் வரி வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த இந்த டோல்கேட் ஆனது தற்போது தனியார் கட்டுப்பாட்டில் வந்ததால் அதிக அளவு தொகை கொடுத்து ஏலம் எடுத்துள்ளதால் கூடுதல் கட்டணத்தை வசூல் செய்வதாக கூறப்படுகிறது.  பொதுவாகவே  இது போன்ற சுற்றுலா தளங்களில் கழிவறை குடிநீர் சுகாதாரம் உள்ளிட்ட பராமரிப்பு காரணங்களுக்காக அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்தின் நேரடி கட்டுப்பாட்டிலோ அல்லது ஒப்பந்தம் மூலமாகவோ நுழைவு கட்டணம் வசூல் செய்வது வாடிக்கை ஆனால் கழிவறை குடிநீர் உள்ளிட்ட  எந்தவொரு அடிப்படை வசதியும் செய்து தரப்படாததோடு அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு நிறைந்திருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்று அதனை உறுதி செய்த நியூஸ் தமிழ் செய்தியாளர் புபேஸ் சந்திரன் திரும்பும் வழியில் சாலையோரம் ஒரு வசூல் பலகையுடன் கூரைக் கொட்டகை இருந்த இடத்தை காட்சிபடுத்த முயன்ற போது அங்கு இருந்த பாலமுருகன் என்ற நபர் இது  என் இடம் இங்க வீடியோலாம் எடுக்கக் கூடாது என மிரட்டத் தொடங்கினார் . தொடர்ந்து அடாவடியாக பேசிய அந்த நபரிடம் சாதாரணமாக செய்தி எடுப்பதற்கு ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்ற கேள்விக்கெல்லாம் பதிலளிப்பதற்கு பதில் அளிப்பதற்கு பதில் யார் யாருக்கோ போனடித்து வர வழித்து மிரட்டுவதில் மட்டுமே குறியாக இருந்தார்.  அடிப்படை வசதிகளை சரி செய்வதற்கு பதில் அடியாட்களை வைத்து மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு பிரசித்தி பெற்ற அரியமான் சுற்றுலாத்தலத்தை அடிப்படை வசதிகளோடு சுத்தமாக வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க  வேண்டும் என பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும்,மற்றும் சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News