ராமநாதபுரம் நிலத்தை ஒப்படைக்க வந்த பெண்

ராமநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு தனது நிலத்தை கொடுக்க வந்த பெண்ணால் பரபரப்பு

Update: 2024-02-20 12:21 GMT
ராமநாதபுரம் வயலுக்கு நீர் பாய்ச்சும் பம்ப்செட் மோட்டாரை 40 நாட்கள் காவல் நிலையத்திலேயே வைத்துக் கொண்டதால் நெற்பயிர்கள் கருகி சாவியானது : கருகி சாவியான நெற்பயிரை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்த விவசாய பெண்மணியால் பரபரப்பு ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் தாலுகா வரவனி கிராமத்தைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரின் மனைவி சகாயமாதா இவருக்கு சொந்தமான 2 1/2 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டு இருந்தார். அந்த நெல்லுக்கு அங்குள்ள ஊரணியிலிருந்து தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்த போது அந்த மோட்டார் திருடு போயிருக்கிறது. இது குறித்து ஆர்எஸ் மங்கலம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி மோட்டாரை திருடி சென்றவரை பிடித்துள்ளனர். அவரிடம் இருந்து குடிநீர் மோட்டாரையும் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் உரிய விசாரணை நடத்தி குடிநீர் பம்பு செட் மோட்டாரை விவசாய பெண்மணி சகாய மாதாவிடம் ஒப்படைக்கவில்லை. இதனால் அவர் தன்னுடைய இரண்டரை ஏக்கர் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் போனதாகவும் தண்ணீர் பாய்ச்சாததால் தன்னுடைய நெற்பயிர் முழுவதும் கருகி சாவி ஆகி போனதாகவும் இதனால் தன்னுடைய வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டதாகவும் கூறி போலீசார் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தி திருட்டு போன மோட்டாரை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்ததற்கு பதிலாக தன்னிடம் ஒப்படைத்து இருந்தால் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சியிருப்பேன் அது இல்லாததால் தன்னுடைய நெற்பயிர்கள் அனைத்தும் கருவி சாவி ஆகி போனது என்று கூறி கருகிய நெற்பயிர்களை இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார். அது மட்டும் இன்றி பம்பு செட்டு மோட்டார் இல்லாமல் தன்னால் இனி தன்னால் விவசாயம் செய்ய முடியாது என்று கூறி இரண்டரை ஏக்கர் நிலத்தையும் ஆர்எஸ் மங்கலம் காவல்நிலையத்துக்கும் ஆர்எஸ் மங்கலம் டிஎஸ்பிக்கும் பத்திரம் எழுதி கொடுத்துவிட்டு மாவட்டத்தை விட்டு வெளியேறப் போவதாக கூறி பத்திரத்தோடு வந்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News