ராமநாதபுரம் காலை காலை உணவு திட்டத்தை தொடங்கிய அமைச்சர் ராஜ கண்ணப்பன் !
காமராஜர் பிறந்த நாளில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தொடங்கப்பட்ட காலை உணவு திட்டம், கன்னிராஜபுரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்
ராமநாதபுர மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் சத்திரிய நாடார் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தொடங்கப்பட்ட காலை உணவு திட்டத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொடங்கி வைத்தார். முதல்வர் சென்னையில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மாணவ மாணவிகளுக்கு பொங்கல், கேசரி, கிச்சடி உணவுகளை பரிமாறி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, மாவட்ட ஆட்சியர் விஷ்ணுசந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கன்னிராஜபுரம் ஊரில் உள்ள காமராஜர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செய்தார். காமராஜர் பிறந்த நாளில் இந்த திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.